Tuesday, 23 September 2008

பின்னூட்ட ஊடக (சு)தந்திரத்துக்குள் தேசம்நெற் மூடி மறைக்கும் கேள்விகள் சில

பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாழ் டொட்கொம் முதல் இந்த வருடம் தொடங்கப்பட்ட தேசம் நெற் டொட்கொம்வரை பல இணையத்தளங்கள் பின்னூட்டங்களால் வாசகர்களை கவர்ந்திழுக்கும் இணையஊடகத்தின் ஒரு வடிவத்தை கையாண்டபோதும் 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்' என்ற கதையாக கந்தலாய் கிழித்து போய்யுள்ளதென்பதே யதார்த்தம்.

தேசம் நெற்றின் 'சமகால' போக்கு குறித்து புலம்பெயர் அரசியல் தளத்தில் மாற்றுப் பார்வையுள்ள 70க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு வெளியிட்ட கூட்டு அறிக்கை தேசம் நெற்றின் பின்னூட்ட ஊடக 'அரசியலால்' குறைந்தபட்ச வாசிப்புக்குக்கூட வாசர்களால் உள்ளாக்க முடியாமல் போனது. மிக நிதானமாக தேசம் நெற் அவ்வறிக்கையின் சுயவாசிப்பை தன்னளவில் காத்திரமாக செய்திருந்தால் அதன் வாசகர்களும் 'அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி' யென பின்தொடர்ந்திருப்பார்கள். ஆனால் நடந்ததென்னவோ 'முதல் கோணல் முற்றிலும் கோணலான' அசிங்கமான ஊடக உரையாடல் மட்டுமே.

கூட்டறிகையில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த 70க்கு மேற்பட்டவர்களை 'கைநாட்டுகளின்' வேலையென விழித்தெழுத தேசம்நெற் அனுமதித்த பின்னூட்டம் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது அந்த அறிக்கையில் 'ரெக்னிக்கள்' தவறுகள் என்ன என்பதை கிண்டிப்பார்ப்பதிலேயே தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வீண்விரயம் செய்துள்ளது. ஆக, கைநாட்டுகளின் கருத்துகளை தேசம் நெற் காதில் போட்டுக்கொள்ளாவிட்டால் தேசம் நெற் இருந்துதான் என்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன?

'கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை தமிழனுக்கு கற்று தர' மெய்யாகவே தேசம் நெற் முன் முனைகிறது என்ற தேசம் நெற் முன்வைத்த கோசத்தை சத்திய வாக்காகக் கருதி, தெரியா தனமாக அப்பாவித்தமிழன் கேட்ட சில (15) கேள்விகளை தேசம் நெற் ஆசிரியர் ஜெயபாலனிடம் பதில் கேட்டு அனுப்பிய பொழுது கட்டாயம் பதில் அளித்தே ஆகவேண்டிய ஒரு சில கேள்விகளுக்கு கூட பதில் அளிக்காது ஜெயபாலன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்த போது முன்பொருகாலத்தில் சிவசேகரம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் சங்ககால வரிகளை 'எம்மூர் தவிர்த்த யாவரும் கேளீர்' என மாற்றி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வந்தது. எவரையும் நோக்கி என்ன கேள்வியும் கேட்கலாம் என்னை நோக்கி எந்த கேள்வியும் கேட்கப்படாத வரை மட்டுமே என்பதாக தேசம் நெற் தனது பதாகையை தயவு செய்து மாற்றிக் கொள்ளுமாறு மிகத்தாழ்மையாக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெயபாலனின் சொத்து விபரங்கள் பற்றிய கேள்வியில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நான் 'இன்லாண்ட் ரிவிநீயு' பிரதிநிதியும் அல்ல, அதற்கு அதிகாரபூர்வமாக வேலை செய்பவனும் அல்ல. ஆனால் ஜெயபாலன் அவ்வாறான ஒரு கேள்விகளை ஞானத்தை நோக்கி அசோக் முன்வைக்க தேசம் நெற்றில் அனுமதித்தால் தன்னை நோக்கி வரும் அவ்வாறான கேள்விகளுக்கு ஜெயபாலன் பதில் அளித்தாக வேண்டிய தார்மீக கடமையை அவர் இலகுவாக புறந்தள்ளிவிட்டுப் போய்விட முடியாது. ஜெயபாலனனுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள அந்தக் கேள்விகளை அவர் தனது புறங்கையால் தட்டிவிடுவது போல் ஒரு பதிலை தேசம் நெற்றில் குமாரியின் பெயரில் வெளியிட்டுள்ளார்.

தன்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் தேசம்நெற் ஜெயபாலன் அவ்வாறான கேள்விகள் தன்மீது விழும் இருட்டடியாக கூச்சலிடுகிறார். தேசம் நெற் பின்னூட்டங்களில் எழுந்தமானமாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியாக வேண்டுமென்று அடம்பிடிக்கும் ஜெயபாலன் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தன்னைப்போன்ற உலகத்தில் எந்த பத்திரிகைக்காரனுக்கும் கிடையாதென திமிர் தனமாக குமாரிக்கு பதில் அளித்துள்ளார்.

புலிகளின் புலனாய்வுத்துறையுடன் மிக நெருக்கமாக இருப்பதாக அறியப்பட்ட 'நிதர்சனம்.கொம்' இணையதளத்துக்கு டக்கிளஸ் தேவானந்தா லண்டனில் பங்கு பற்றிய கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஜெயபாலன் மெளனம் சாதிப்பது ஏன்? இது அப்பட்டமான ஒரு காட்டிப் கொடுப்பு அல்லவா? இனியும் தன்னை ஒரு பத்திரிகையாளன் என்றழைக்க ஜெயபாலனுக்கு இருக்கும் தார்மீகத் தகுதி என்ன? இந்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக ஜெயபாலன் பதில் அளித்தாக வேண்டும். அத்துடன் இவ்வளவு காலமும் லண்டன் தமிழ் பத்திரிக்கைத்துறைக்கு ஆற்றிய தொண்டு போதுமென்ற நினைப்பில் இளைப்பாறுவது ஒன்றே ஜெயபாலனின் பிழைப்பைப் பாதுகாக்கும்.

தேசம்நெற் ஜெயபாலனிடம் பதில் கேட்டு தேசம்நெற்றில் ஒரு பின்னூட்டமாக இந்தக் கேள்விகளை எழுதிய அப்பாவித்தமிழன் தனது பின்னூட்டம் தேசம்நெற் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தேசம்நெற் வாசகர்களுக்கு புட்டுவைத்துள்ளார். அவரது கேள்விகளுக்கு ஜெயபாலன் முழுமையாக பதில் அளிக்கும் வரை பதிலடி தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

வாசகர்களின் கவனத்துக்கு அப்பாவித்தமிழன் ஜெயபாலனிடம் கேட்டெழுதிய கேள்விகளை கீழே இணைத்துள்ளேன்.


தேசம் ஆசிரியர் ஜெயபாலன் பதில் தருவாரா?
அன்பானவர்களே!

நான் தேசம் இணையத்தில் கேட்ட கேள்விகள் அங்கு பிரசுரிக்கப்படவுமில்லை. அது குறித்து பதில் தரப்படவுமில்லை. எனவே வேறு வழியின்றி அவர்களிடம் தெரிவித்தபடி இதனை மின்னஞ்சலாக அனுப்புகிறேன்.. எனவே இதனைப் பெற்றுக் கொள்பவர்கள் தயவு செய்து தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அவர்களிடமிருந்து முடியுமாயின் கீழ் வரும் எனது வினாக்களுக்கு பதில் பெற்றுத்தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வினா-1 கருத்துக் களத்தில் வாசகர்களின் கருத்துக்களை தணிக்கை செய்வதில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நான் கேட்ட கேள்விகளை போடவுமில்லை. அவற்றுக்குரிய பதிலும் தரவில்லை. இது ஏன்? தணிக்கை செய்வதாயின் என்ன வரைவிலக்கணம் வைத்து செய்கிறீர்கள்? நான் கேட்ட கேள்விகள் என்ன அடிப்படையில் நிராகரித்தீர்கள்?

வினா-2 ராயாகரன் பற்றி நீங்கள் எழுதியபோது ஒருபேப்பர் அரவி பற்றி விரைவில் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.ஆனால் இதுவரை எழுதவில்லை. ஏன் இன்னும் எழுதவில்லை? ஏப்போது எழுதுவீர்கள் ? (ஏனெனில் சிலர் நீங்கள் ஒருபோதும் எழுதமாட்டீர்கள் என்று கூறுகின்றனர். அதற்காகத்தான் இதனை கேட்கிறேன்.)

வினா-3 ரயாகரன் பாங்க் கொள்ளைப் பணத்தை சுருட்டிக் கொண்டதாகவும் அதில்தான் அவர் வெளிநாடு வந்ததாகவும் எழுதினீர்கள். முடியுமாயின் எப்படி வெளிநாடு வந்தது என்று நிரூபிக்கட்டும் என சவால் விட்டீர்கள். நல்லது. நீங்கள் எதுவும் ஆதாரம் இல்லாமல் அவதூறு எழுதமாட்டீர்கள் என நம்புகிறேன். அதேவேளை நீங்கள் “புளொட்” இயக்கப் பணத்தில் வெளிநாடு வந்ததாகவும் முடியுமாயின் ஜெயபால் தான் வெளிநாடு வந்த விதத்தை நிருபிக்கட்டும் என்று சிலர் சவால் விடுவதை குறிப்பிட்டு உங்கள் பதில் என்ன? என்று கேட்டேன். ஆனால் நீங்கள் இதுவரை பதில் தரவில்லையே ஏன்? (புளொட் அமைப்பைச் சேர்ந்த ஆச்சிராஜன் என்பவர்தான் உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த நன்றிக்காகவே அவர் இறந்தபோது நீங்கள் அஞ்சலிக் கட்டுரை எழுதினீர்கள் என்றும் கூறுகிறார்கள்.)

வினா-4 ஞானம் மாஸ்டர் பற்றி எழுதியபோது அவர் எப்படி வீடு வாங்கினார். கணக்கு வழக்குகளைக்காட்டுவாரா என்று கேட்டீர்கள்.. நானும் உங்கள் நேர் திறன் மிக்க வினாக்களை படித்து பெருமிதம் கொண்டேன். ஆனால் நீங்கள் கடந்த வருடம் இரண்டாவது வீடு வாங்கியிருப்பதாகவும் அதற்குரிய வருமான கணக்கு வழக்குகளை ஜெயபால் முன் வைப்பாரா என ஒரு நண்பன் கேட்கின்றான். இரண்டு வருடமாக வேலை யில்லாமல் இருக்கும் ஜெயபால் இரண்டு வீடு வாங்கி மோகேஜ்மும் கட்ட முடியுமாயின் 30 வருடமாக வேலை செய்து வரும் ஞானம் மாஸ்டர் ஒரு வீடு வாங்கமுடியாதா என்றும் கேட்கின்றான். இதனை உங்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் வருமான கணக்கு வழக்குகள் சொத்து விபரங்களை முன் வையுங்கள் என்று கேட்டேன். ஆனால் நீங்கள் இது பற்றி ஏதுவும் கூற மறுக்கிறீர்களே ! இது நியாயமா?

வினா-5 நீங்கள் இரண்டாவது வீடு வாங்கியதே பெரும் குழப்பத்தில் இருக்க புதிதாக ஒரு கடை மற்றும் சொலிசிஸ்ரர் கம்பனி எல்லாம் வாங்கியதாக கதை வருகிறதே. இதெல்லாம் உண்மையா? அப்படியாயின் இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது? உங்கள் வருமானம் என்ன? உங்கள் கணக்கு வழக்குகளை எல்லோர் முன் வைக்க முடியுமா? வெளிப்படையாக முன் வைப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் யாராவது ஒரு பொது ஆளுக்கு முன்னால் வைக்க முடியுமா?

வினா-6 உங்களின் இரண்டு வீடுகளையும் எத்தனை ஆயிரம் பவுண்ட் செலவழித்து கடந்த வருடம் திருத்தம் செய்தீர்கள் என்பதை தயவு செய்து கொஞ்சம் கூறமுடியுமா? அமெரிக்கா கனடா பிரான்ஸ் எல்லாம் கொலிடேக்கு குடும்ப சகிதமாக கடந்த வருடம் சென்று வந்துள்ளீர்களாம். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார்கள். ஆனால் நீங்கள் பதில் கூற மறுக்கிறீர்களே? அது ஏன்?

வினா-7 ரி.ஐ.சி வரதகுமார் என்.ஜி.ஓ மூலம் பணம் சுருட்டுவதாகவும் அதற்கு அவர் கணக்கு காட்டுவாரா என கேட்டிருந்தீர்கள். அவ்வாறு பணம் பெற்றுக் கொள்பவர்களை நீங்கள் கேள்வி கேட்டு அம்பலப்படுத்துவதைப் பார்த்து மகிழ்வு கொண்ட தேசம் வாசகர்களில் நானும ஒருவன். ஆனால் நீங்கள் இதுவரை எத்தனை என்.ஜி.ஓ க்கள் பதிவு செய்துள்ளீர்கள்.? அவற்றின் மூலம் எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்.? கவுன்சிலர் போல் அவர்களுடன் சேர்ந்து ஒரு என்.ஜி.ஓ நடத்துவதாகவும் அதன் மூலம் பணம் பெற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்களே. எனவே இதுபற்றிய விபரங்களை நீங்கள் மக்கள் முன்வைப்பீர்களா?

வினா-8 ராஜன் என்பவர் வீட்டில் “நிதர்சனம்” சேதுவை நீங்கள் சந்தித்தது உண்மையா? ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரின் போட்டோவை நீங்கள் அவரிடம் கொடுத்ததாக கூறுகிறார்களே. இதை உங்களால் மறுக்க முடியுமா? ஏன் அப்படி செய்தீர்கள் ? அவரை சந்தித்த பின்புதான் நீங்கள் எஸ்.எல்.டி.எவ் மீது அவதூறு பொழிய ஆரம்பித்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே.இது உண்மையா?

வினா-9 எஸ்.எல்.டி.எவ் படுகொலைகளைக் கண்டித்து மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்தபோது உங்களுடன் புலி புலனாய்வு உறுப்பினர் எனக் கூறப்படும் நபர் ஒருவரை அழைத்து வந்து படம் எடுத்தீர்கள் எனக் கூறகிறார்களே. அது உண்மையா? இப்படி ஒரு புலி நபரை உங்களுடன் கூட்டி வந்த விபரத்தை ஏன் நீங்கள் எஸ்.எல்.டி.எவ் காரர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.? உங்களுக்கும் அந்த நபருக்கும் உள்ள தொடர்பு என்ன?அவருடன் சேர்ந்து பாபர்கியூ சாப்பிட்டது கொலிடேக்கு பீச்சுக்கு போய் உல்லாசம் அனுபவித்தது எல்லாம் உண்மையா? இது தேசம் சக ஆசிரியர்களுக்கு தெரியுமா?அவருக்கூடாக வந்த பணமே உங்கள் பெயரில் பல முதலீடகளாக மாறியுள்ளதாக சொல்கிறார்களே. இதை உங்களால் மறுக்க முடியுமா?

வினா-10 வடக்கு லண்டனில் இருக்கும் ஒரு இந்தியன் அம்மாவிடமிருந்து உங்களுக்கும் கொன்ஸ்ரன்ரைனுக்கும் மாதம் மாதம் பணம் தரப்படுவதாக கருத்துக் களத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதனை சுட்டிக் காட்டி இது உண்மையா என கேட்டேன். அப்படியாயின் எவ்வளவு பணம்? ஏன் தரப்படுகிறது? என்பதை விளக்கும்படி கேட்டேன். ஆனால் நீங்கள் எதுவும் கூற மறுக்கிறீர்களே .அது ஏன்?

வினா-11 அப்ஸ் லிங்ஸ் உரிமையாளர் மோசடி செய்வதாக உங்கள் பத்திரிகையில் செய்தி போட்டீர்கள். அவரும் உடனே உங்கள் மீது வழக்கு போட்டார். ஆனால் அதன் பின் நடந்தது என்ன?நீங்களும் கொன்ஸ்ரன்ரைனும் சேர்ந்து அவருடன் பிசினஸ் செய்ததாக ஒரு கதை உலாவுதே. அதை உங்களால் மறக்க முடியுமா? நீங்கள் ஒருவரைப்பற்றி எழுதுவதே அவரை மிரட்டி காரியம் சாதிக்கத்தான் என்று கூறுகிறார்களே..அது உண்மையா? உங்கள் சக ஆசிரியர் கொன்ஸ்ரன்ரைனுடன் சேர்ந்து நீங்கள் பல பிசினஸ் செய்வதாக பேசிக் கொள்கிறார்களே. இது உண்மையா? அப்படியாயின் என்ன பிசினஸ் செய்கிறீர்கள் என்பதையும் அதன் கணக்கு வழக்குகளையும் தேசம் வாசகர்கள் முன் வைப்பீர்களா?

வினா-12 காதர் மாஸ்டர் அவர்கள் கூட்டம் நடத்தியபோது அவர் வெளி நாட்டில்லிருந்து ஆட்களை இறக்குமதி செய்வதற்காகவே கூட்டம் நடத்துவதாக உங்கள் பத்திரிகையில் குற்றம் சாட்டினீர்கள். ஆனால் நீங்களும் இவ் வேலை செய்வதாகவும் எனவே காதர் மாஸ்டர் அவர்களை குற்றம் சாட்ட உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை என்கிறார்களே. எனவே நீங்கள் இதுவரை எத்தனை பேரை அழைத்துள்ளீர்கள்? உங்கள் உதவிமூலம் விசா பெற்று லன்டன் வந்தவர்கள் எத்தனை பேர்? ஆவர்களிடம் நீங்கள் பெற்றுக் கொண்ட பணம் எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடுவீர்களா?

வினா-13 நீங்கள் நடத்திய மலேசிய தமிழ் இலக்கிய மாநாடு குறித்த கணக்கு விபரங்களை கேட்டதாலும் தொடர்ந்து உங்களுடன் சேர்ந்து ஒத்துழைக்க மறுத்ததாலும் பத்மநாபஜயர் மீது அவதூறு பொழிந்தீர்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது பொய் என்றால் அந்த மாநாடு தொடர்பாக எங்கெங்கு எவ்வளவு பணம் பெற்றீர்கள்? அதன் கணக்கு வழக்கு என்ன ? போன்ற விபரங்களை தயவு செய்து காட்டமுடியுமா? நீங்கள் இதுவரை நடத்திய கூட்டங்கள் அதற்காக பெற்றுக் கொண்ட பண விபரங்கள் என்பனவற்றை முன் வைக்க முடியுமா?

வினா-14 அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களிடம் உங்கள் பத்திரிகைக்கு இலங்கை அரசின் விளம்பரங்களை பெற்றுத்தரும்படி கேட்டதாகவும் அதை அவர் செய்து தராததால்தான் ஆத்திரப்பட்டு உங்கள் சக ஆசிரியர் கொன்ஸ்ரன்ரைன் மூலம் அமைச்சர் அவர்களை நக்கல் அடித்து கட்டுரை எழுதியதாக கூறுகிறார்களே. (அவர்கள் இதற்கு பதில் அளித்து தேவையானால் கொன்ஸ்ரன்ரைனின் பழைய கதைகளை வெளியிடவா? என்று கேட்டதும் பயந்துபோய் வாலைச் சுருட்டிக் கொண்டதாக கூறுகிறார்களே.இது உண்மையா?) நீங்கள் அவரிடம் இலங்கை அரச விளம்பரம் கேட்டது உண்மையா? வேறு ஏதும் உதவிகள் கேட்டீர்களா?

வினா-15 நீங்கள் பொலிஸிற்கு ஆட்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்வதாக ஜோசேப் ஜயா அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? நீங்கள் மாதாமாதம் பொலிசை சந்திப்பது உண்மையா? உங்களுக்கு பொலிஸ் பணம் தருவது உண்மையா? பணம் தந்தது உண்மை எனில் எதற்காக உங்களுக்கு தருகிறார்கள்? லண்டனில் நடக்கும் தமிழர் சம்பந்தமான விடயங்கள் குறித்து உங்களுடன் பொலிசார் கதைப்பது உண்மையா? அப்போது நீங்கள் யார்யாரை காட்டிக் கொடுத்துள்ளீர்கள் என்ற விபரத்தை கூற முடியுமா? (ஏனென்றால் உங்களுடைய நலன்களுக்காக வேண்டுமென்றே சிலரைக் காட்டிக் கொடுத்ததாக கூறுகிறார்கள்.)

பொதுவாக பத்திரிகை வெளியிடும் வியாபாரிகளிடம் இப்படி கேள்வி கேட்பதில்லை. ஆனால் நீங்கள் மற்றும் உங்கள் சக ஆசிரியர்கள் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்காக போராடுவதாக குறிப்பிடுவதால்தான் இக் கேள்விகளைக் கேட்கிறேன். ஏல்லோரையும் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தும் நீங்கள் நிச்சயம் சுத்தமானவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே இவற்றைக் கேட்கிறேன்.உங்கள் மீது இருக்கும் இவ் விமர்சனங்களுக்கு தக்க பதில் அளித்து என்போன்று உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு
“தேசத்தை” நம்பும்
ஒரு அப்பாவி தமிழன்.
appavithamilan@yahoo.in

Friday, 12 September 2008

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள் - குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால் ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் நிதர்சனம்.கொம் தீப்பொறி.கொம் போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும் வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் பிரநிதிகளாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்தி வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் இணையத்தளங்கள் ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் அப்பட்டமான புனைவுகளையும் பொய்க்கதைகளையும் தனிமனித சேறடிப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இந்த இணையத்தளங்களும் இவ்வாறான செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித் தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன. இவர்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை விடச் செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் அவதூறு மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது.

வளர்ந்து வரும் இந்த ஜனநாயக விரோத போக்கு பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகம், அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கு அவதூறான பின்னூட்டங்களை விட்டு மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் போட்டிகள் பூசல்களை உருவாக்கும் எத்தனம் தனிமனிதத் தாக்குதல்களை ஊக்குவித்தலில் அற்ப மகிழ்ச்சி, செயலூக்கம் கொண்ட மாற்றுக்கருத்தாளர்களின் மேல் அவதூறுகளை வீசி அவர்களின் பெயரைக்கெடுத்தல் போன்ற கேடுகெட்ட பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதரகள், மீதும் அமைப்புகள் மீதும் அவதூறுகளைச் செய்வதையே இவர்கள் தொடர்கின்றனர். ஆதாரமற்ற அவதூறுகளைப் பிரசுரித்து விட்டுப் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தனி நபரோ அமைப்போ அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பது தான் இவர்களது வாதம்.

ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்துவதும் அதிகாரத்தை விமர்சிப்பதுமான காத்திரமான நிலையை ஒரு ஊடகம் முன்னெடுக்கும்போது அதன் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் அரசியல் அறத்துடனும் வெளிப்படையாகவும் இயங்குவது முன்நிபந்தனையாகிறது. ஆனால் ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுகளையும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெறும் கிசுகிசுக்களையும் யாரும் எழுதலாம் அதனைக் கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் இந்த ஊடகங்களும் பிரசுரிப்பார்கள் என்பது அறமற்ற நிலைப்பாடாகும். மறுபுறத்தில் ஆரோக்கியமான கருத்துருவாக்கத்துக்கும் நேர்மையான கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்தப் போக்குத் தடையாகவுமுள்ளது. எனவே இந்தப் பொறுப்பற்ற இணையத்தளங்களின் போக்கை வெறுமனே பரபரப்பை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் மலிவான ஊடக உத்தி, என்று போகிற போக்கில் நாம் சாடிவிட்டு மட்டும் போய்விட முடியாது.

இலக்கியச் சந்திப்புப் போன்ற நிகழ்வுகளும் புலம்பெயர் சிறுபத்திரிகைக் கலாச்சாரமும் ஆயுதக் கலாச்சார எதிர்ப்பையும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான குரலையும் அதிகார அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்றுக் கலாச்சார மறுத்தோடி அரசியலையும் ஜனநாயக விழுமியங்களையும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாகப் புலம் பெயர் நாடுகளில் கட்டமைத்துப் பேணி வந்துள்ளன. தலித்தியம் பெண்ணியம் புலம்பெயர் இலக்கியம் போன்ற பல்வேறு சிந்தனை போக்குகளும் செயல்பாடுகளும் இம்மாற்றுக் கருத்து அரசியலின் பன்முகத்தன்மையின், சகிப்புத் தன்மையின் பெறுபேறுகள்.

புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறு பேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரசுரிக்கும் இத்தகைய இணையத் தளங்களின் உள்நோக்கம் என நாம் கருதுகிறோம்.

திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் பல தனிமனிதர்களையும் அமைப்புகளையும் சக ஊடகங்களையும் சூழலிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கும் நோக்கத்துடனும் உள்முரண்களைப் பகைமுரண்களாக்கும் தந்திரத்துடனும் மாற்றுக் கருத்தாளர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய சனநாயக் குரல்களின் தொகுப்பைச் சிதைக்கும் எத்தனத்துடனுமே எழுதப்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.

இன்று ஆதிக்கத்திலிருக்கும் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தின் கூறுகளே இந்த அவதூறுப் பிரச்சாரங்களின் கலாச்சார அடிப்படையாகும். சனநாயக வேடமிட்டு வன்முறைக் கலாச்சாரத்தை இத்தகைய ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன. பொய்கள் புனைவுகளின் அடிப்படையில் தனிமனித தாக்குதல்களையும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் அரசியல் செயல்பாட்டாளர்கள் குறித்துப் பிரசுரித்து அவர்களின் பெயர்களுக்குக் ஊறு விளைவித்து அவர்களின் சமூக அரசியல் செயல்பாட்டை தடைசெய்யும் நடைமுறை, ஆயுதக் கலாச்சார அரசியலில் மாற்றுக் கருத்தாளர்கள் தடைசெய்யப்பட்டதற்கும் ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கும் ஒப்பானதே.

இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் ஈடுபட்டிருந்தாலும் அண்மைக் காலங்களில் இத்தகைய போக்கினை முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம் காட்டும் தேசம் இணையத்தளத்தில் இதுவரை வெளியான நூற்றுக்கணக்கான அவதூறுப் பக்கங்களிலிருந்து ஒரு சில துளிகளை மட்டும் இங்கே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம்:

இலண்டன் தலித் மாநாட்டைக் குறித்து ஏராளமான அவதூறுகள் தேசம் நெற்றில் கட்டுரையாகவும் பின்னூட்டங்களாகவும் வெளியாயின. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி என்.ஜீ.ஓக்களின் வாலாகச் செயற்படுகிறது எனப் பொய்க் குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டன.

கலைச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவுகூரலில் நடந்த கருத்து விவாதங்கள் கொச்சையாகத் திரிக்கப்பட்டு தேசத்தில் வெளியாகின. அந்த விவாதம் குறித்து முற்றிலும் பொய்யான செய்திகளே எழுதப்பட்டன.

1983 ஜூலைப் படுகொலைகள் நினைவாகப் பிரான்ஸில் நடத்தப்பட்ட நெடுங்குருதி நிகழ்வு குறித்துப் பொய்யான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டன.

அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக் குறித்து விமர்சித்து எழுதப்பட்ட கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால் தேடிப் பிடித்து மறுபிரசுரம் செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின் அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே கொச்சைப்படுத்தி அங்கே தொங்கவிடப்பட்டிருந்தவை உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில் வெளியாகியது.

ரிபிசி வானொலி நிலையத்தில் களவாடியவர்கள் எஸ். எல். டி. எப் உறுப்பினர்களே என்றொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு தேசத்தில் பிரசுரமாகியது.

தேசம் தனக்குக் கிடைக்கும் தகவல்களை அடிப்படை ஊடகவியலாளரின் விதிமுறைகளுக்கமைய சரி பிழை பார்ப்பது கிடையாது. எழுந்தமானமாகக் குற்றச்சாட்டுகளைத் தேசம் அள்ளியெறியலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களே பதிலளித்து தங்கள் நற்பெயரை நிறுவ வேண்டும் என்பது தேசத்தின் கருத்து. தேசம் இதுவரை வெளியிட்ட சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புகளுக்கும் இதுவரை எதுவித ஆதாரங்களையும் சமர்ப்பித்ததில்லை.

அரசியல் - கலை இலக்கியத் தளங்களில் தனியாகவும் அமைப்பாகவும் இயங்கும் நாம் பின்வருபனவற்றை வலியுறுத்தி இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம்:

1. கடந்த காலங்களில் தேசம் இணையத்தளத்தில் ஆதாரங்களில்லாமல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேசம் ஆசிரியர் குழுவினர் வெளியிட வேண்டும். ஆதாரங்களை வெளியிடமுடியாத பட்சத்தில் தேசம் இணையத்தளம் ஊடக நெறிகளின்படி வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.

2. செய்திகள் கட்டுரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் (அவை தனிநபர்களையோ அமைப்புகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருப்பின்) பிரசுரிப்பதை நிறுத்த வேண்டும்.

11 செப்ரம்பர் 2008

தொடர்புகளுக்கு: opposecalumny@googlemail.com


1. கற்சுறா - மற்றது - கனடா
2. அருந்ததி - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
3. ரஞ்சி -ஊடறு- சுவிஸ்
4. செழியன் - கருமையம்- கனடா
5. நிர்மலா ராஜசிங்கம் - எஸ். எல். டி..எவ் - இங்கிலாந்து
6. அ. தேவதாசன் - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
7. பௌஸர் - மூன்றாவது மனிதன் - இங்கிலாந்து
8. அசுரா - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
9. யோகரட்ணம் - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
10. சுந்தரலிங்கம் -தலித் சமூக மேம்பாட்டு முன்னணி - பிரான்ஸ்
11. ஷோபாசக்தி - சத்தியக்கடதாசி -பிரான்ஸ்
12. சுகன் - சத்தியக்கடதாசி - பிரான்ஸ்
13 தியோ ரூபன் - சத்தியக்கடதாசி - பிரான்ஸ்
14. விஜி - கிழக்கிலங்கை ஜனநாயக முன்னணி - பிரான்ஸ்
15. எம். ஆர். ஸ்டாலின் - கிழக்கிலங்கை ஜனநாயக முன்னணி - பிரான்ஸ்
16. ராகவன் - எஸ். எல். டி. எவ்- இங்கிலாந்து
17. எஸ் பஷீர் எஸ்.எல்.எம்.அய்.சி -இங்கிலாந்து
18. சந்துஷ் - எஸ். எல். டி. எவ்- இங்கிலாந்து
19. நமோ பொன்னம்பலம் - எஸ். எல். டி. எவ்- கனடா
20. அகிலன் கதிர்காமர் - எஸ். எல். டி. எவ்- யு.எஸ்.ஏ
21. டாக்டர் நீதிராஜா - பி.யூ..டி.எஸ். - இங்கிலாந்து
22. ரவி பொன்னுத்துரை - வைகறை - கனடா
23. சாந்தன் - விம்பம் - இங்கிலாந்து
24. ஜெபா - மற்றது- கனடா
25. ரவி - மனிதம் -சுவிஸ்
26. ரகு கதிரவேலு - ஈழநாசம் இணையத்தளம் - கனடா
27. நஜா மொகமட் எஸ்.எல்.அய்.எப் - இங்கிலாந்து
28. கே. கிருஷ்ணராஜா விம்பம் - இங்கிலாந்து
29. டாக்டர் ரயீஸ் முஸ்தபா எஸ்.எல்.அய்.எப் - இங்கிலாந்து
30. எஸ்.எம்.மார்சூக் இஸ்லாம்- அய்.எஸ்.ஏ.எம் - இங்கிலாந்து
31. வில்பிரெட் வில்சன் வைகறை - கனடா
32. ஏ.குமாரதுரை விழிப்பு இணையத்தளம் - டென்மார்க்
33. கீரன் - இங்கிலாந்து
34. செல்வராஜா ஆதவன் - கனடா
35. வாசுகி பரமசாமி - கனடா
36. விஜயகுமாரி முருகையா - கனடா
37. தர்சனா தர்மலிங்கம் - இங்கிலாந்து
38. எஸ். சுந்திரகுமார் - இங்கிலாந்து
39. எஸ். தவராஜா - இங்கிலாந்து
40. ஷாரிகா திராணகம - நெதர்லாந்து
41. டாக்டர் நிக்கலஸ்பிள்ளை - இங்கிலாந்து
42. ரஜிதா. எஸ். வேலு- இங்கிலாந்து
43. உமா - ஜெர்மனி
44. மல்லிகா பரராஜசிங்கம்- ஜெர்மனி
45. எஸ்.பாலன் - இங்கிலாந்து
46. எஸ். வேலு - இங்கிலாந்து
47. மு. நித்தியானந்தன் - இங்கிலாந்து
48. அபி இராசரட்ணம் - இங்கிலாந்து
49. காண்டீபன் - இங்கிலாந்து
50. த.ஜெயகுமார் - இங்கிலாந்து
51. போல் பெர்னான்டோ - இங்கிலாந்து
52. அகிலன் வர்ணகுலசிங்கம் - இங்கிலாந்து
53. சிவசாமி சிவராஜன் - ஜெர்மனி
54. மங்கை சிவராஜன் - ஜெர்மனி
55. தர்மினி - பிரான்ஸ்
56. தேவா - சுவிஸ்
57. சங்கீதா ஜெயகுமார் - இங்கிலாந்து
58. சுமதி ரூபன் - கனடா
59. இன்பா சுசீந்திரன் - ஜெர்மனி
60. ந. சுசீந்திரன் - ஜெர்மனி
61. மனோரஞ்சன் - கனடா
62. ஏ. எம். ரஷ்மி - இங்கிலாந்து
63. போல்(நரேஷ்) - இங்கிலாந்து
64. ஜெமினி - ஜெர்மனி
65. நந்தன் - ஜெர்மனி
66. நிமோ - ஜெர்மனி
67. சங்கர் - ஜெர்மனி
68. நா.சபேசன் - இங்கிலாந்து
69. நா. சிறி கெங்காதரன் - இங்கிலாந்து
70. ஈசன் சோமசுந்தரம் - இங்கிலாந்து
71. எம்.வை.எம் சித்தீக் - இங்கிலாந்து
72. பாலசூரியன் – நெதர்லாந்து
73. சிவகுமார் - இங்கிலாந்து.


இந்தக் கூட்டறிக்கையைப் பிரசுரம் செய்யுமாறு கோரி கீழ்வரும் இணையத்தளங்களிற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம்.

1. தேனீ
2. ஊடறு
3. தூ
4. உயிர்நிழல்
5. சத்தியக்கடதாசி
6. இனியொரு
7. பதிவுகள்
8. கரித்துண்டு
9. விழிப்பு
10. தாயகம்
11. ஈழநாசம்
12. கீற்று
12. தேசம்
13. நெருப்பு
14. அதிரடி
15. உதயம்-நெற்
16. ஈர்அனல்

Saturday, 16 August 2008

இன்னும் ஏன் இந்த யுத்தம்?

''புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல. அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும்.'' கொழும்பில் வெளிவரும் சன்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு கடந்த வாரம் வழங்கியுள்ள பேட்டியொன்றில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இதனைக் கூறியிருந்தார். அந்தப் பேட்டியில் ''கடந்த இருபத்தைந்து வருட காலம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டும்' என்ற அவரது கூற்று 'இன்னும் ஏன் இந்த யுத்தம்' என்ற கேள்வியை தமிழ் மக்களின் பொதுப்புத்திக்கு முன்வைத்து புதிய திசை வழியொன்றில் பதில் தேடுமாறு கோருகிறது. அரசியல் நோய்க்கூறு கொண்ட 'ஏக தலைமை' எனும் பாசிச அரசியல் தமிழ் மக்களைத் தொற்றி வியாபிக்கத் தொடங்கிய போது திருத்தந்தை இராயப்பு ஜோசப் போன்றோர் ஒரு முன் எச்சரிக்கை மணியை தேவாலயங்களில் ஒலிந்திருந்தால் இன்று அவரது கருத்துகள் 'ஒரு மெய்யான மேய்ப்பன் தொலைந்து போன ஆட்டுக்குட்டியை இருட்டில் தேடிய உழைப்புக்கு' சரிநிகராக மொத்தத் தமிழ் மக்களாலும் அவர்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் தரப்பினராலும் மதிக்கப்பட்டிருக்கும்.

புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படும் விசேட 'பாஸ்' நடைமுறையின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அரச படையினருடனான மோதலின் நடுவே பொது மக்களை இடைநிறுத்தி வைத்திருப்பதானது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயலெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் புலிகள் பலவந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டு கோள்விடுத்துள்ளது.

வன்னியிலும் வன்னியைச் சுற்றி மொத்தம் எட்டு களங்களில் நிகழும் யுத்தத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி மாற்றுத் தங்குமிடங்களில் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் எதுவும் இல்லாது நிர்க்கதியாக மரணத்தின் விளிம்பில் உயிர் பிழைத்துக்கொண்டிருகின்றனர். அவர்கள் மரங்களின் கீழ் வெய்யிலிலும் மழையிலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பசியால் கதறி அழும் குழந்தைகள், மீளாத் துயரத்தில் பெற்றோர்கள், தள்ளாத முதுமை மற்றும் நோயுற்ற முதியோர்கள் என்று 'யுத்தம்' எல்லாத் தரப்பு மக்களையும் கையறுநிலைக்கு கொணர்ந்து சொல்லணா அவலத்திற்குள்ளாக்கியுள்ளது. யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் அவர்களை கிளிநொச்சியை நோக்கி குவியப்படுத்தி தமது இராணு வியூகங்களுக்குள் சிக்க வைக்காமல் அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு சுயாதீனமாகச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வர விரும்பின் அதற்கு ஏதுவாய் அரச படைகள் குறிப்பிட்ட பாதைகளை அறிவித்து அப்பகுதிகளில் குறைந்த பட்சம் வாரத்தில் சில நாட்கள் குறிப்பிட்ட மணி நேரமாவது யுத்தத் தவிர்ப்பு நிலையை கடைபிடிக்க வேண்டும்.

Wednesday, 14 May 2008

ஆடுகள் நனைவதாக அழுகின்ற 'ஓநாய்'

Pillayan group harasses TDNF supporters in Ka'luvaagnchikkudi
[TamilNet, Wednesday, 14 May 2008, 09:38 GMT]
A group of Pillayan paramilitary personnel, led by operative Senthooran, in the days following the Eastern Provincial Council elections, entered the houses of the supporters of Tamil Democratic National Allaiance (TDNF), a Tamil alliance consisting ex-militant and paramilitary groups, in Ka'luvaagnchikkudi area, 22 km south of Batticaloa and have attacked the supporters of the TDNF, which had won a single seat in the Batticaloa district.

The pro-government groups People Liberation Organization of Tamil Eelam (PLOTE) led by D.Siththarathan, Tamil United Liberation Front (TULF) led by V.Anandasangaree, and Eelam Peoples Revolutionary Liberation Front (EPRLF Padmanaba wing) were contesting in a the Eastern Provincial Council election under the banner Tamil Democratic National Front.


மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவத்துக்காக 'தமிழ்நெற்' கவலை கொள்வதை என்னவென்பது? கடந்த காலத்தில் மாற்று தமிழ் அமைப்புகளை தேடித்தேடி புலிகள் வேட்டையாடிய வரலாறுகளை எல்லாம் மறந்து இந்தப் புதிய வேசத்தை என்னவென்பது? தமிழ் மக்கள் வாழ்ந்த மண்ணிலெல்லாம்... அது இலங்கையாகட்டும்..... தமிழ் நாடாகட்டும்... ஏன் ஐரோப்பிய மண்ணில் கூட புலிகள் மனித கொலைக்கு பலிபீடங்களை கட்டியவர்கள். புலிகளின் ஏக தலைமைத்துவ பாசிச வெறிக்கு பலியான மாற்றுத் தமிழ் ஸ்தாபனங்களின் தலைவர்கள் எத்தனை? தொண்டர்கள் எத்தனை? வட கிழக்கைச் அரசியல் சூனியப் பிரதேசமாக்கிய 'மேதகு தேசிய தலைவரின்' அரசியல் மதிநுட்பம் இன்று மாற்றுத் தமிழ் அமைப்புகள் மீது அக்கரை கொள்வதாக மாய்மாலம் காட்டுவது ஏன்?

மட்டக்களப்பு 'மைக்கேல்' தொடக்கம் பாரிஸ் 'சபாலிங்கம்' ஈறாகாக நேற்று கொல்லப்பட்ட மகேஸ்வரி வரை பூமிப்பந்தில் தமிழர் வாழ்விடங்கள் எங்கும் 'மேதகு தேசியத் தலைவரால்' விதைக்கப்பட்ட கொலைக் கலாச்சாரம் தமிழர் வாழ்வியலை உள்ளிருந்து அரித்து அழித்து வரும் ஒர் அரசியல் நோய்க்கூறு. தமிழர் பொதுப்புத்திக்கு தினம் தீனிகொடுக்கும் 'தமிழ்நெற்' மேற்குறித்த நோய்கான விசக் கிரிமியை தொடர்ச்சியாக சர்வதேசமெங்கும் பரப்பி வருகிறது. அதன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம்தான் மாற்று தமிழ் அமைப்புகள் மீதான 'தீடீர்' அக்கரை.

Wednesday, 30 April 2008

காவிய(த்) தலைவன் பிரபாகரன்; அன்றும் இன்றும்

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூரியத்தேவன், தேசியத்தலைவர், மேதகு போன்ற மகுடங்களால் பட்டமிட்டு விழித்துச் சொல்லப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் முன் 'கரிகாலன்' என்ற பட்டம் கிடைத்ததனால்தான் என்னவோ காவிரி ஆற்றின் மீது 'கல்லணை' கட்டி வரலாற்றில் இடம்பிடித்த சோழன் போல் ஈழமெங்கும் மனிதக் 'கல்லறை'கள் எழுப்பி வரலாறு படைத்து வருகிறார்.

போராட்ட ஆரம்ப காலத்தில் ஏதோ தீக்காயத்தினால் பிரபாகரனுக்கு காலில் ஏற்பட்ட 'கரி' அடையாளம் காரணமாக மற்றவர்களால் கொஞ்சம் செல்லமாகவும் கொஞ்சம் நக்கலாகவும் அழைக்கப்பட்ட 'கரிகாலன்' என்ற புனைபெயர் பிற்காலத்தில் சோழ மன்னன் கரிகாலன் ரேஞ்சுக்குப் போய்விட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த பல கொடுமைகளில் 'என்ன கொடுமை சார் இது'.

அடுத்து சூரியத்தேவன்.சூரியன் உதித்ததும் தலைவர் பங்கருக்குள் போய்விடுவார். தலைவர் பங்கரால் வெளியில் வரும் நேரம் சூரியன் மறைந்துவிடும். கொக்கோ கோலா ஃபோர்மிலா தெரிந்த இருவர் போல ஒருவர் இருக்கும் இடத்தில் மற்றவர் இருக்க மாட்டார் போல. தலைவர் இல்லாத போது சூரியன். சூரியன் இல்லாதபோது தலைவர். 'சூரியத்தேவன்' உண்மையில் தலைவருக்கு பொருத்தமான பட்டம்தான்.

தலை அப்போ திருமணம் முடித்திருந்த நேரம். புலிகள் குடாநாட்டில் தமது தலைவரின் திருமணச் செய்தியையும் தாம் செய்த ஒரு கண்ணி வெடித்தாக்குதல் குறித்தும் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் காவியத் தலைவன் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் காண்போமென எழுதப்பட்டிருந்தது. அதை வாங்கி படித்து பார்த்து விட்டு முதியவர் ஒருவர், 'தம்பி காவியத் தலைவர் எண்டு எழுதியிருக்கு, அதை காவிய தலைவர் எண்டு எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும்' என்று சீரியஸ்சாக முகத்தை வைத்துக்கொண்டு படு நக்கலாக சொன்னார். பாவம் நோட்டீஸ் கொடுத்த பொடி ஏதோ விளங்கின மாதிரி படு சீரியஸ்சாக நின்று கேட்டுக்கொண்டு போனார்.

போராட்டத்தின் தொடக்கமே ஏடாகூடமாக தொடங்கியதால்தான் என்னவோ பச்சிலை மடு கன்னி மேரி மாதாவின் திருவுருவச் சிலையை 'காவிய' மேதகு அதனை தேவன்பிட்டியில் தடுத்து வைத்திருக்க கட்டளை இட்டுள்ளார். காவியத் தலைவனின் காவிய கதைகளில் இதுவும் ஒன்று.

காவிய(த்) தலைவரினால் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்ட போர்க் காவியங்கள் வருங்கால சந்ததிகளால் பேசப்படுமோ இல்லையோ, தலைவரின் காவிய கதைகள் காலங்காலமாக பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

Friday, 25 April 2008

வேதனை...! அவமானம்.....!! வெட்கம்........!!!

கிழக்கு தேர்தலைத் தடுக்க இந்தியத் தலையீடு அவசியம்: தமிழக முதல்வருக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008, 10:02 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

......... மறைந்த ராஜீவ் முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி ஈழ தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் பிரிக்கக்கூடாது என உறுதி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது சிங்கள இனவெறி அரசு இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 ஆம் நாள் முதல் தபால் வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

இவ்வாறான சூழலில்தான்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக-

ராஜீவுக்கு எதிராக-

இந்திய அரசுக்கு எதிராக- ........


கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தடுத்து நிறுத்தக் கோருவது, அது முடியாது போனால், தேர்தலைத் பின்போடக் கேட்கும் தலையால் மண்கிண்டும் 'மேதகு'வின் அரசியல் இன்னும் எத்தனை உயிர்களை போரில் பலிகொடுக்கப் போகிறது?

திருமாவளவன் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் தனது கல்லூரிப்படிப்பில் தீவிரமாக இருந்ததால்தான் என்னமோ அந்த ஒப்பந்தத்தை பிறப்பிலே ஊனமாக்க அப்போ 'மேதகு' செய்த அரசியல் சித்து விளையாடுகள் தெரியாமல் போய்விட்டதாக எம்மை நாம் நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்.

'வடகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் பிரிக்கக்கூடாது என்பதை உறுதி செய்த' இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டுவர காரணமானவரை மிக பவ்வியமாக 'மறைந்த' ராஜீவ் எனவிழிக்கும் திருமாவளவன் அவரின் கோரமான கொலையின் பின்னுள்ள 'மேதகு' தேசியத் தலைவரின் - இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இருபது வருட வனவாசமனுப்பிய மாவீரத்தனத்தை - வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றபின் ஈழத்தமிழருக்காக உருகி அறிக்கைவிடுவது மிகச்சேமமாக இருக்கும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை திட்டமிட்டு பிறப்பிலே ஊனமாக்கியதோடு அல்லாமல் அதனை இருபது வருடங்கள் அனாதையாக துரத்தி அலையவிட்டுவிட்டு இன்று அதனை உரிமைகோரி உச்சிமுகர்ந்து உறவுகொண்டாடும் அயோக்கியத்தனத்தின் மறுபெயர்தான் 'மேதகு' தேசியத் தலைவரின் அரசியல் 'மதிநுட்பம்'.

கோடிக்கணக்கான காசும் தார்மீக ஆதரவும் தந்த எம்ஜிஆர் போன்ற பெரும் தலைவர்களின் ஆதரவில் நின்ற அன்றைய 'மேதகு'வையும், லட்சக்கணக்கில் காசு வாங்கி அறிக்கைகள் விட்டும் ஐரோப்பிய கூட்டங்களில் பேசும் எடுபிடிகளுக்கு சில்லறை எறிந்தே களைச்சுப்போன 'மேதகு'வையும் பார்த்தால்....

'எப்படியிருந்த நீங்கள் இப்பிடி ஆயிட்டிங்களே' என்றுதான் கேட்கத் தோன்றும்.

'கோடி வாங்கி அன்று அரசியல் செய்த மேதகு லட்ச
மடித்து அரசியல் செய்யும் லட்சணம் இன்று'
என ஒரு புதுக்குறள் வேறு வந்து தொலைகிறது.

'உவை இங்க வந்து எங்களுக்கு ஒண்டும் பிரிச்சு மேய வேண்டாம், சும்மா ஓரமா நிண்டு வேடிக்கை பார்த்தால் போதும் நாங்க பூந்து விளையாடுவமில்ல' என்ற ரேஞ்சில பேசின 'மேதகு' ரசிகர் மன்றம் கிழக்கு மாகாண சபைத்தேர்தலைக் கண்டு அதீதமாக 'திகில்' கொள்வது சும்மா... சும்மா அல்ல.

உலகின் நான்காவது பெரிய ராணுவத்துக்கு காவோலை கட்டி ஓடவைத்ததாக கதை அளந்த 'தேசிய' ஊடகங்கள் நெடும் கிடையாக ஆராரோ காலிலெல்லாம் விழும் அவமானம் 'மேதகு' அரசியலுக்கு கிடைத்த வெகுமானம்.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் வீழ்வதே மேல்.

Wednesday, 26 March 2008

ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி !

தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" நாளேடு தெரிவித்துள்ளது.

புலியளின்ர 'ஏக தலைமை'த்துவம் தந்த அரசியல் அவலங்கள் பற்றி கொஞ்சம் யோசிக்க மூளையைக் கனக்கக் கசக்கத் தேவையில்லை.

ஈழத்தில் உள்ள தமிழ்க்கட்சிகள் 'இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை' தமிழகத்தில் உள்ள கட்சிகள் எமக்காக 'தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்ப' வாய்ப்புகள் இல்லை என்பதே அரசியல் யதார்த்தம்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஈழத்துத் தமிழருக்காக 'ஒன்றுபட்டுக் குரலெழுப்ப' வேண்டும் எண்டு நெஞ்சை நிமித்தி எழுதிய தலையங்கத்தை வாசிக்கும் போது, இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் 'ஒற்றுமை' பற்றி தவறுதலாகக்கூட ஒரு வரி எழுதாத யோக்கியதை என்னவெனும் கேள்வி எவர் முன்னும் தவிர்க்க முடியாது எழும்.

இலங்கை உள்ள அனைத்துச் சிறுபான்மையினங்களின் அரசியல் தலைமைகள் 'இலங்கை இனப்பிரச்சினை குறித்து' பொது உடன்பாட்டுக்கு வர தடையாக இருப்பது புலிகள் முன் வைக்கும் 'ஏக தலைமை' என்னும் அறமற்ற அரசியல் கோட்பாடே ஆகும்.

இது குறித்து மெளனம் சாதிக்கும் 'தினக்குரல்' தமிழக அரசியல் கட்சிகளுக்கும், தமிழக மக்களுக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை காண' அரசியல் போதிப்பது ஊடக தர்மம் அல்ல